• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி…

என்னையும் எனது தாயையும் அடித்து கொலை மிரட்டல் விடுக்கும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு

சேலம் சிவதாபுரம் சேர்ந்த வள்ளியம்மாள் மற்றும் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர் அப்போது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி நீரை ஊற்றி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்

இதனைத்தொடர்ந்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்
காவல்துறை விசாரணையில் எனது கணவர் வெள்ளி பட்டறையில் கூலிவேலை செய்து வருவதாகவும் எனக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் எனது தாய் அதே பகுதியில் உள்ள எனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார் எங்களது பூர்வீக சொத்து இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது

இந்த நிலையில் நான் தாயை பார்க்க செல்லும் போது நிலத்தில் சொத்து கேட்பதாக கூறி என்னையும் தாயையும் அடித்து சித்திரவதை செய்து வீட்டிற்கு வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார் இது குறித்து கடந்த வருடம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை

காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் சொத்தில் பங்கு தரமுடியாது என கூறி தொடர்ந்து சித்திரவதை செய்து வருவதால் வேறுவழியின்றி இறந்து விடலாம் என நினைத்தேன் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக விசாரணையில் தெரிவித்தார்

எனவே என்னையும் எனது தாயையும் அடித்து சித்திரவதை செய்யும் அண்ணன் அண்ணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்

தன்னையும் தாயையும் சித்திரவதை செய்யும் அண்ணன் அண்ணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு…