• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Oct 13, 2022

லிச்சி பழம்:

சீனாவை பூர்வீகமாக கொண்டதும், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கின்ற லிச்சி பழமானது நாம் அதிகம் அறிந்திராத பழமாகும்.

• லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.
• முட்டை வடிவத்தில் இருக்கும் இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
• லிச்சிப்பழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது.
• எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம் என்றால் இதில் கிடைக்கும் கலோரி 76, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
• மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல், பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.
• இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும், ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.
• பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
• லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரேக்கியத்துடன் சுறுசுறுப்பாய் வேலை செய்யும்.
• லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.