• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மும்பை பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ByA.Tamilselvan

Oct 10, 2022

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 800 புள்ளிகள் வரை சரிந்து 57,300 புள்ளிகள் என்ற அளவிற்கு கீழே சென்றது. இதில், டி.சி.எஸ், ஹெச்.சி.எல்.டெக் ஆகியவை முறையே 0.43 சதவீதம் மற்றும் 0.53 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து உள்ளன. இதுதவிர, டாடா ஸ்டீல் (1.02%), மஹிந்திரா அண்டு மஹிந்திரா (1.07%), பஜாஜ் பைனான்ஸ் (1.53%), ஹெச்.டி.எஃப்.சி. வங்கி (1.77%) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (2.23%) உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீத சரிவுடன் காணப்பட்டன.
இதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நிப்டி குறியீடும் சரிவடைந்து 17,110 புள்ளிகளாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று வீழ்ச்சி கண்டது. உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவை பங்குகள் சரிவடைய கூறப்படும் சில காரணங்களாக உள்ளன. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.