• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

எருமை மாடுகள் மோதி சேதமடைந்த ரயில்

ByA.Tamilselvan

Oct 6, 2022

எருமை மாடுகள் மீது மோதியதால் குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.
மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன. எருமை மாடுகள் மீது ரெயில் மோதியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். எருமை மாடுகள் மீது மோதியதில் ரெயில் எஞ்சினின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. அதை அதிகாரிகள் சரி செய்தனர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.