• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விடுமுறையில் சிறப்பு வகுப்பு.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

ByA.Tamilselvan

Oct 3, 2022

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10-ம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13-ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.