• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,

ByKalamegam Viswanathan

Apr 9, 2026

திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று இரவு விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மக்களுக்காகவே வாழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் புதல்வர் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை சந்தித்தார், அவர் வெற்றி பெற, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு செயல்பட்டு, அவரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

நமது அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் ஆசியோடும், வெற்றி உறுதி செய்யப்படும் என மாணிக்கம் தாகூர் கூறினர்

உடன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விருதுநகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.சிவகுருநாதன் நகர் மன்ற தலைவர் திரு.மாதவன் விருதுநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் திரு.காஜா ஷேரிப் விருதுநகர் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.நாகேந்திரன் அவர்களும் இருந்தனர்.