• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

ByA.Tamilselvan

Sep 29, 2022

பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், மற்ரும் விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், விசிகவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி அன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோர் 2ல் வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனிதசங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.