• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தைவான் எல்லையில் பறந்த சீனா போர் விமானம்!..

Byமதி

Oct 2, 2021

1940ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் சீனா, தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்பட 38 விமானங்கள் நுழைந்ததாக அறிவித்துள்ளது. பின்னர் தங்களின் போர் விமானங்களை கொண்டு அவற்றை விரட்டி அடித்ததாகவும் தைவான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்கள் மூலம் பிராந்திய அமைதிக்கு சீனா குந்தகம் விளைவிப்பதாக தைவான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. போர் விமானங்கள் பறந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.