• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி-அண்ணாமலை உதவியாளர் கைது..!!

ByA.Tamilselvan

Sep 22, 2022

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து அனுப்பியதும் தெரியவந்தது.இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.