• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் மர்மமான முறையில் தமிழக பெண் மரணம்!..

Byமதி

Oct 1, 2021

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் லட்சுமி. அவர் தன்னுடைய பெற்றோருடன் டெல்லியில் தங்கி அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்றும் பணிக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்று கொஞ்ச நேரத்தில் அவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்ததாக அழகு நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவரது உடல் அழகு நிலையத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. லட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.