• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குஜராத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி

ByA.Tamilselvan

Sep 14, 2022

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமானப் பணியின் போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் பல்கைலக்கழகத்திற்கு அருகே கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பணியின் போது லிஃப்ட் ஒன்று அறுந்து விழுந்தது. ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்டட விபத்து வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்..