• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 9, 2022

பூண்டு சாதம்:
தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப், பூண்டு – 15 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – 1 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை –சிறிதளளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , தனியா , மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து , தனியாக வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி , உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ரொம்ப சுவையான பூண்டு சாதம் ரெடி.