• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் ரிஷிசுனக் தோல்வி ஏன்?

ByA.Tamilselvan

Sep 6, 2022

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தோல்வி அடைந்தது ஏன் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வானார். ரிஷிசுனக் 60,399 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் ரிஷிசுனக் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரிஷியின் மனைவி அக் ஷிதா இன்னும் பிரிட்டிஷ் குடியுரிமை பெறவில்லை என்றும் அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதே போல ரிஷியிடம் அமெரிக்க குடியுரிமை உள்ளதால் பிரதமர் தேர்தலில் போட்டியிடுபவர் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.