• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மேற்கு ஆப்பிரிக்காவில் குண்டு வெடிப்பு…

Byகாயத்ரி

Sep 6, 2022

மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர்.புர்கினா பாசோவின் வடக்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (செப் 4) பொருட்களை ஏற்றிச் சென்ற கான்வாய் வண்டி மீது ஐஇடி வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.மேலும் இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சஹேல் பிராந்திய ஆளுநர் ரோடோல்ப் சோர்கோவின் கூறுகையில், “இந்த சம்பவம் வடக்கில் போர்சங்காவிற்கும் ஜிபோவிற்கும் இடையிலான சாலையில் நடந்துள்ளது. பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, வெடிகுண்டு சாதனத்தில் மோதியதுதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் எனவும்” அவர் கூறினார்.