• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கல்விதந்தை மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பங்கேற்று மரியாதை…

Byகாயத்ரி

Sep 6, 2022

ஓ.பன்னீர்செல்வம் ஆணையின்படி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தந்த தேவர் கல்விதந்தை PK.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவைக் குழுத் தலைவர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத் எம்.பி. தலைமையில், அஞ்சலி செலுத்தினார்.

இவருடன் மாநிலங்களவை உறுப்பினரும், இராமநாதபுர மாவட்ட கழக செயலாளருமான ஆர்.தர்மர் எம்.பி., தேனி மாவட்ட கழக செயலாளர் SPM.சையதுகான், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.ஐயப்பன் எம்.எல்.ஏ, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் GR.இராமமூர்த்தி, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் KR.அசோகன் மற்றும் கழக நிர்வாகிகளும் படைபோல் திரண்டு கலந்து கொண்டனர்.