தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுன் ரூ.38,032-க்கு விற்பனையானது. மறுநாள் 1-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்து ரூ.37,680 ஆக குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டது . இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.