• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்தியாவுக்கே திரும்பி போங்கள்- அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்

ByA.Tamilselvan

Aug 27, 2022

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது அமெரிக்கா பெண் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இந்திய பெண்களை ஆத்திரத்துடன் திட்டி வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.
இந்திய பெண்களைப் பார்த்து அந்த வெள்ளைக்காரப் பெண், நீங்கள் இந்தியாவுக்கே திரும்பி போங்கள். எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் தான் இங்கு இருக்கிறீர்கள்.
இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்ற போது இங்கே ஏன் வருகிறீர்கள். நான் இந்தியர்களை வெறுக்கிறேன் என்று கூச்சலிட்டு திட்டியுள்ளார். மேலும், ஒரு இந்திய பெண்ணை வெள்ளைக்கார பெண் தாக்கவும் செய்துள்ளார்.