• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தனியார் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…,

Byp Kumar

Oct 12, 2026

சிறுமலை சாலை இயங்கி வந்த தனியார் நூல் ஆலையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்தும், இன்று வரை பணி காலத்தில் இருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங் க வேண்டிய பிஃஎப் மற்றும் இதர பணித் தொகை சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் படியும் வழங்காமல் நிர்வாகத்தினர் ஏமாற்றி வருவதாக கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் பணித் தொகை சுமார் ரூ 16 கோடிக்கு மேல் உள்ளது என்றும் இதை வழங்காமல் 10 ஆண்டுகளுக்கு மேல் ஏமாற்று வருவதாக குற்றம் சாட்டி தொழிலாளர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் வழங்கினர்.

சிறுமலை சாலை இயங்கி வந்த தனியார் ஆலை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக செயல் பட்டு வந்தது. நிர்வாக திறன் இல்லாத காரணத்தால் கடந்த 2015 ல் இந்த ஆலை மூடப்பட்டது.

இந்த ஆலையில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பி எஃப் மற்றும் இதர பணித் தொகை வழங்கி கணக்கு முடிக்காமல் நிர்வாகத்தினர் தலையை மூடிவிட்டனர்.

தொழிலாளர்களுக்கு சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் படியும் வழங்க வேண்டிய தொகை ரூ 6 கோடிக்கு மேல் உள்ளது. இந்த தொகையை வழங்க கோரி 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலை இந்த இடத்தை விற்பனை செய்ய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினை வழங்காமல் இடத்தை விற்பனை செய்ய கூடாது பத்திரப் பதிவு செய்ய கூடாது என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.