உத்தரபிரதேச மாநிலம் நொய்டா இரட்டை கோபுரங்கள் நாளை தேதி வெடிவைத்து தகர்ப்பப்பட உள்ளன.
நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது.இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் என்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த கட்டிடம் நாளை மதியம் 2 மணி அளவில் இடிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகளை எடிபைஸ் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். நாளை காலை 7 மணிக்கு முன்பாக அனைவரும் இந்த பகுதியை விட்டு காலி செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது