• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 23, 2022

மீல்மேக்கர் டிக்கீஸ்
தேவையான பொருட்கள்:

மீல்மேக்கர் 20, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, வெங்காயம் 1, மைதா மாவு 1 டேபிள் ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு : தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதிநீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து பச்சை தண்ணீரில் 2 முறை அலசி தண்ணீரை நன்றாக பிழிந்து எடுக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரெட் தூளில் புரட்டி கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு புரட்டி எடுத்த டிக்கீஸை இருபுறமும் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.