• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மகா தீபம்..,

ByS. SRIDHAR

Nov 25, 2026

புதுக்கோட்டை அருகே உள்ள குமர மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலான குமர மலை அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவிலில் உள்ள தீபத் தூணில் அறநிலைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் மகாதீபமானது ஏற்றப்பட்டது

முன்னதாக திருக்கோவிலில் மகா தீபத் திருநாளை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் மேற்புறம் உள்ள தீபத் தூணில் மகா தீபம் ஆனது ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்று சென்றனர்.