• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கட்டட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா…

ByS.Navinsanjai

Aug 15, 2022

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சிவம் பெயிண்டிங் ராஜ்குமார் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மயில்சாமி மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.