• Thu. Apr 25th, 2024

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வயது

ByA.Tamilselvan

Aug 15, 2022

தென் மாவட்ட மக்களின் வளச்சியில் முக்கிய பங்குவகிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வது பிறந்தநாள் பயணிகள் கேக்வெட்டி கொண்டாடினர்.
சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்று, ‘இந்தியாவின் அதிவிரைவு ரெயில்’ என்ற பெருமையை பெற்றது
இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது, வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான். இதில் நாள்தோறும் சென்னை-மதுரை, மதுரை-சென்னை இரு மார்க்கங்களிலும் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் செல்கின்றனர். ஒருவழிப் பயண தூரம் 497 கி.மீ. ஆகும். ஆண்டுக்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் வைகை எக்ஸ்பிரஸ் பயணம் செய்கிறது. இதுவரை 1 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணம் செய்துள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று 45-வது பிறந்தநாள். இதையொட்டி மதுைர ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *