• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நியாய விலை கடை பின்புறம் காயங்களுடன் புள்ளிமான் உயிரிழப்பு..

Byகுமார்

Sep 21, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவெம்பக்கோட்டை அணை மற்றும்இருக்கன்குடி வரை ஆற்றுப் பகுதிகளில் அதிகளவில் கருவேல முட்கள் நிறைந்து இருப்பதால் மான்கள் சுற்றித் திரிவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று வெம்பக்கோட்டை நியாய விலை கடை பின்புறம் உள்ள புதர்ச் செடியில் புள்ளிமான் ஒன்று உடம்பில் காயங்களுடன் இறந்து கிடந்த நிலையில் பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

நீருக்காகவும் உணவுக்காகவும் சுற்றி திரிந்தபோது வழி தவறி ஊருக்குள் வந்ததால் நாய்கள் விரட்டி கடித்து உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் புள்ளிமான் இனங்களை பாதுகாக்கவும் அவற்றிற்கு உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.