கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் வங்கி ஊழியரை வழிமறித்து ரூ 10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை கைது செய்த தக்கலை போலீசார் அவர்களை சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரவீஷ். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தணிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 9ஆம் தேதி தனக்கு சொத்து வாங்குவதற்காக குமரி மாவட்டம் தக்கலை பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பத்துலட்சம் ரூபாய் பணத்துடன் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஆழ்வார் கோயில் அருகே சென்றபோது சொகுசு காரில் வந்த நபர்கள் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர் பின்னர் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த பத்து லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பிரவீஷ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணலிக்கரை பகுதியை சேர்ந்த பிராங்கிளின் ஜோஸ் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், மற்றும் மாகீன் ஆகியோரை இன்று கைது செய்த போலீசார் வழிப்பறி கொள்ளையர்கள் மூன்று பேரையும் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்