• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி, அமெரிக்காவிலுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனையை நடத்தி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தது.

இதில் பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் 3-ல் ஒரு பங்கு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

இது குழந்தைகளுக்கு நல்ல பலனை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் பெரியவர்களைப் போலவே அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்றவை ஏற்பட்டதுள்ளது.

இதையடுத்து 5- 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரத்துக்காக பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி இந்த மாதம் விண்ணப்பிக்க உள்ளோம். அதன் பின் ஐரோப்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம்.’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் பைசர் நிறுவனம் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை தொடக்க பள்ளி வயது குழந்தைகளுக்கு செலுத்தி சோதனையை நடத்தி வருகிறது.