• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

குமரியில் வசூல் வேட்டை நடத்தும் டாஸ்மாக் கூடுதல் அதிகாரி..

Byகுமார்

Sep 21, 2021

குமரி மாவட்ட டாஸ்மாக் கூடுதல் அதிகாரியாக சாம்சுந்தர் பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஒவ்வொரு மது விற்பனை மையத்திற்கும் சென்று ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களிடம் தினம் ரூ 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கு கட்டாயமாக மது பானங்களை விற்பனை செய்ய வேண்டும், மதுவை குறித்த விலையை விட எவ்வளவு கூடுதல் விலைக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம்.

கடை ஒன்றுக்கு தினசரி ரூ.10 ஆயிரத்தை சாம்சுந்தருக்கு கொடுக்க வேண்டுமாம்.

அப்படி கொடுக்காத கடை பொறுப்பாளர்கள் மீது இல்லாத குற்றச்சாட்டை கூறி நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவது குறித்து,
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில், மாநில துணை செயலாளர் மோஸ்லின் பியர்சன் தலைமையில், டாஸ்மாக் விற்பனை மைய பணியாளர்கள், சம்பந்தபட்ட அதிகாரி சாம்சுந்தர் மீது புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அரவிந்த்திடம் கொடுத்தார்கள்.