• Sat. Apr 27th, 2024

மத்திய அரசின் தனியார் மயமாக்க கொள்கைக்கு எதிர்ப்பு.. மதுரையில் ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Byகுமார்

Sep 21, 2021

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்து மதுரை ரயில் நிலையத்தில் SRES – NFIR தொழிற்சங்கத்தின் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ரெயில்வே தொழில்சங்க உறுப்பினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாநகர் மாவட்ட ரயில்வே சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் எலக்ட்ரிக்கல் பிரிவில் தனியார்மயம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால், 10 மடங்கு பயணகட்டணம் உயரக்கூடும், இது நேரடியாக பொதுமக்களை பாதிக்கும் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *