• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

செஸ் ஒலிம்பியாட்-ல் பங்கேற்க பாகிஸ்தான் மறுப்பு…

Byகாயத்ரி

Jul 29, 2022

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏந்தி வந்து, இந்தியா அதை அரசியலாக்கியுள்ளது. சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறுவேன்,” என்று கூறியுள்ளார். நேற்று (ஜூலை 28)வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இந்தியா வந்திருந்தாலும், அதில் பங்கேற்க வேண்டாம் என திடீரென முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது,” என்று கூறினார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதில் பாகிஸ்தான் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.