
செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.
நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்குபிறகு இன்று முதல் போட்டிகள் துவங்கவுள்ளன.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா இம்முறை பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 6 அணிகளில் 30 பேர் பங்கேற்கின்றனர்.ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளை கொண்ட சுவிஸ் லீக் வடிவத்தில் நடத்தப்படுகிறது. அதில், முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. பொதுபிரிவினருக்கான முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.
அதேபோன்று பெண்களுக்கான முதல் போட்டியில் அமெரிக்கா விளையாட உள்ளது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

