உறைபனியாக உள்ள திபெத்திய பீட பூமியில் கிட்ட தட்ட 1000 புதிய நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.இவற்றில் 968 பேக்டீரியா வகைகளில் 98% அறிவியல் அறிந்திராதவையாம்.சில பேக்டீரியாக்கள் 15000 வருடமாக வாழ்ந்து வருபவையாம்.இந்தப் பனிப்பாறைகள் உருகும்போது இந்த நுண்ணுயிரிகளிலுள்ள புதிய தொற்றும் காரணிகள் இந்தியாவிலும் சீனாவிலும் தொற்று மற்றும் பெரும் தொற்றுகள் ஏற்படத்தலாம் என்கிறார்கள்.இதனால் பல புதிய நோய் கிரிமிகள் உலக முழுவதும் பரவலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.