• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jul 27, 2022

மூங்கிலரிசி கொழுக்கட்டை:

தேவையானபொருட்கள்

மேல் மாவுக்கு:
2 கப் மூங்கிலரிசி மாவு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய், வாழை இலை – 5 – 10, பனைஓலை – 8 – 10, உப்பு – தேவையான அளவு
பூரணம் செய்வதற்கு:
1 கப் தேய்காய் துருவல், சிறிதளவு ஏலக்காய்த்தூள்

செய்முறை:
முதலில் அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். கொதித்த நீரில் உப்பு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கும்போதே மூங்கிலரிசி மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகத் கொட்டி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். கொட்டிய மூங்கிலரிசி மாவு கெட்டியானதும் இறக்கி, சற்று ஈரந் துணியால் மூடி வைக்கவும். பூரணம் தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பிட நடுவில் பூரணம் வைத்து இலையோடு சேர்த்து மூடவும்
அவ்வாறு பனையோலையை சுத்தம் செய்து மாவினை லேசாக பரப்பி பூரணத்தையும் வைத்து மூடவும். அதில் இருக்கும் நாரினைக்கொண்டு பனைஓலையினை கட்டிவிடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாழை இலை பனை ஓலை நல்ல மணத்துடன் கூடிய மூங்கிலரிசி கொழுக்கட்டை தயார்.