• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

ByAlaguraja Palanichamy

Jul 21, 2022

அன்றாட வாழ்வில் மொபைல் போனின் முதுகெலும்பாய் உள்ளது மெமரிகார்ட். சிம் இல்லாமல் கூட மொபைல் போன் இருந்து விடாலாம் ஆனால் மெமரிகார்ட் இல்லாமல் மொபைல் போன் இருக்காது.

அனைவரும் அறியும் ஒரு விஷயம் மெமரிகார்ட் என்பது தரவுகளை பதிவு செய்யும் ஒரு அட்டை அது 2,4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது. அதன் அளவுகளுக்கு ஏற்றவாறு அதன் விலையும் இருக்கும். ஆனால் ஒரு கடையில் 4GB மெமரிகார்ட் 500 என்றால் மற்றொரு கடையில் 700 என்பார்கள். இதைப்பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? விலை கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள், ஏனென்றால் மாறிவரும் தொழில்நுட்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் தானே. மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும்.

இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory card னுடைய class என்று குறிப்பிடப்படுகிறது. அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed ஐ குறிக்கும் code ஆகும். உதாரணமாக 4 என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் file ஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும். அதே போல் class 6 – 6MB per second, Class 8 – 8MB per second, Class 10 – 10MB per second என்ற வேகத்தில் data க்களை பரிமாறிக் கொள்கிறது.இதுதான் நீங்கள் அறநித்திடாத மெமரிகார்டின் சுவாரஸ்ய தகவல்…