கடலில் பெய்யும் மழை பயனற்றது.
பகலில் எரியும் தீபம் பயனற்றது.
வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது.
நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
பசியற்றவனுக்கு கொடுக்கும் அன்னதானம் பிரயோசனம் அற்றது.
அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது.
சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது.
பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் உருவத்தைக் கொண்டோ.. அல்லது ஒருவரின் பணபலத்தைக் கொண்டோ.. அல்லது வாயால் வெட்டி வீழ்த்தும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டோ ஒருவரை எடை போடக்கூடாது. கிளை முதல் வேர் வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் வேப்ப மரத்தின் கசப்புத் தன்மை மாறாது. சிலரின் பிறவிக் குணம் என்பதை யாராலும் மாற்றவோ திருத்தவோ முடியாது.
திருத்துகிறேன் பேர்வழி என்று நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி வேதனையையும் வசவுகளையும் பெற்றுக் கொள்வதை விட நமக்கிருக்கும் கடமைகளையும் தேவைகளையும் கவனம் செலுத்துவதே சிறப்பு, வயதும் காலமும் தான் சிலருக்கு சில விஷயங்களை தெளிவாக உணர்த்துகிறது.