• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

எல்லாருக்கும் ஏதாவது ஒரு இடத்தை தன் வாழ்நாள்குள் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம் எல்லோருக்கும் விண்வெளியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற மிக பெரிய ஆசை இருக்கும். அதை தற்போது அமெரிக்காவை சேர்ந்தவர்கள் உண்மையாக்கி உள்ளனர்

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட் சுற்றுலாப்பயணிகள் 4 பேருடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதல்கட்டமாக வெற்றிகரமாக முடிந்துள்ளது.
பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்.