• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்ட சிறையில் 4 சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..,

ByAjmalkhan saleemraja

Oct 27, 2026

ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் மற்றும் ஜெயில் பகுதியில் உள்ள கரட்டு பகுதிகளில் கைதிகள் இருப்பதாக தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோல் கேமரா மூலமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200 மேற்பட்ட சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறை வார்டனை தங்கப்பாண்டி உள்ளிட்ட நான்கு காவலர்களை தாக்கி விட்டு சிறையில் இருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் மண்டல காவல்துறை டிஜஜி விஜயேந்திர பிதாரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறைக்கைதிகள் லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி, பொன்முத்து நிஜந்தன் கார்த்திக் ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், பிரவீன், முத்து இளங்கோ, ராஜு உள்ளிட்ட 17 சிறை கைதிகள் சிறை வார்டனை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இதில் சிறை வார்டன் பலத்த காயத்துடன் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேனி மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய 17 பேரில் நான்கு பேரை கைது செய்து அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் தப்பி ஓடிய 16 பேரை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.