• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

7 வயது சிறுவன் நேற்று மாயமான நிலையில், பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக கண்டெடுப்பு..!

ByKalamegam Viswanathan

Oct 27, 2026

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் – சத்தியா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா மற்றும் மகள், மற்றும் மகன் முத்துச்செல்வம் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே 11.00 மணியளவில் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று 20கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட இருந்த நிலையில், இன்று அதேபகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுகுறித்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாயமான சிறுவன் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.