• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 25, 2022

காளான் மிளகு வறுவல்:

தேவையான பொருள்கள்:-
காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் -2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு மல்லித்தூள் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் -தேவையான அளவு மிளகுத்தூள் -2 ஸ்பூன் சோம்பு -1 ஸ்பூன் க.எண்ணெய் -தேவையான அளவு உப்பு – தேவையான அளவு..
செய்முறை:-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த உடன் சோம்பு சேர்த்து பொரித்து கொள்ளவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் காளான் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து காளான் நன்றாக வதங்க சிறிது நீரை தெளித்து விடவும். கடைசியில் அடுப்பில் இருந்து காளானை இறக்கும் பொழுது 2 ஸ்பூன் மிளகு தூள் தூவி இறக்கவும். சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.