• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சுகாதார செவிலியர்கள் மனு! – பதவிப் பெயர் மாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு..,

ByAjmalkhan saleemraja

Oct 23, 2026

பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட VHN, ANM, SHN மற்றும் CHN செவிலியர்களை உள்ளடக்கிய இச்சங்கம், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாநில அவசர செயற்குழு கூட்டத்தின் முடிவின்படி, முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட MLHP பணியாளர்களின் பதவிப் பெயரை ‘CHO’ என மாற்றம் செய்ய அரசு பரிசீலிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் VHN மற்றும் ANM செவிலியர்களின் முறையான பதவி உயர்வுப் பதவியான CHN பதவிக்கு முரண்பாடாக அமையும் என செவிலியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விதிகளுக்கு உட்படாத MLHP பணியாளர்களின் பதவிப் பெயர் மாற்ற முயற்சியை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.