• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

வாக்கு சாவடி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மறு சீரமைப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவல கத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் தொகுதி வாக்கு பதிவு அதிகாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநலத்துறை அலுவலர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார்.

உதவி வாக்கு பதிவு அலுவலர் தாசில்தார் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். தேர்தல் தாசில்தார் கருப்பையா வரவேற்றார். இந்த கூட்டத்தில் தி.மு. க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், த.வெ.க., உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.