• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் திடீரென நிலநடுக்கம்

Byகாயத்ரி

Jun 23, 2022

கர்நாடகாவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குடகு மாவட்டத்திலும் அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் பல பகுதிகள் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மக்கள் பலரும் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், பொருட்சேதம் சிறிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.