• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

‘தளபதி 66’ படத்தின் டைட்டில் மாற்றம்..!

Byவிஷா

Jun 22, 2022

நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்திற்கு ‘வாரிசு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த பீஸ்ட் படம் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் சாதனை படைத்தது. பீஸ்ட் படத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.
பீஸ்ட் படம் வெளியான பிறகு தளபதி 66 படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது. விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக இப்படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக கமிட்டாகி இருக்கிறார். இரண்டு மாதம் முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
பின்பு தற்போது சென்னையில் பரவலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல் போலவே, இப்படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் கேசுவலாக கோர்ட் சூட்டில் சேர் மீது அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.