• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை மெட்ரோ வழித்தடத்தில் ஒரு குற்றாலம்..!

Byவிஷா

Jun 21, 2022

சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ததை காணமுடிந்தது.
நேற்று மாலை நேரத்தில் சென்னையின் வண்ணாரப்பேட்டை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் எண்ணூர் போன்ற பகுதிகளில், சுமார் 45 நிமிடங்களாக பெய்த மழையின் காரணமாக விம்கோ மெட்ரோ மேற்புற வழிதடத்தின் மேலிருந்து குற்றாலம் அருவி போல மழை நீர் கொட்டியது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக தகவலறிந்த மெட்ரோ நிர்வாகம் உடனடியாக விரைந்து இதற்கென குழாய் வழி ஏற்படுத்தி தக்க வழிகளில் அந்த மழைநீரை வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அத்துடன் இந்த வீடியோ வெளியானது முதல் பல கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் இது மெட்ரோ வழித்தடமா அல்லது குற்றால அருவியா என்று கிண்டல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.