• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரை வரவேற்ற அமைச்சர்கள்..,

ByPrabhu Sekar

Aug 29, 2026

நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சென்னை வந்தனர் அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் வரவேற்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பில் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லியில் தமிழர்கள் குறித்து தகவல் சேகரித்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சென்னையை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர், கடலூரை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர், திருச்சியை சேர்ந்த 3 பெண்கள், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் என 21 பேர் மீட்கப்பட்டனர்.

இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.