• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

By

Sep 12, 2021 , ,

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 13 மொழிகளில் 198 நகரங்களில் நடைபெற உள்ளது. மாணவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த பதிவில், ‘மருத்துவர் ஆகும் கனவுடன் மாணவர்கள் இன்று நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள். அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும், NEET தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற சிறந்த கல்லூரியில் மருத்துவம் பயில அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.