• Tue. Nov 3rd, 2026

வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கண்மாயில் அனுமதியின்றி மண் திருட்டில் ஈடுபட்ட கும்பல்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது.

இந்த கண்மாய் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

இங்கு சட்ட விரோதமாக அனுமதியின்றி விவசாயிகள் பெயரில் போலியாக கிராவல் மணல் அள்ள அனுமதி பெற்று

2 ஜேசிபி மற்றும் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மணலை
அனுமதியின்றி சட்டவிரோதமாக திருடி கூடுதல் விலைக்கு தனியாருக்கு விற்று கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வொண்டர் மண் அள்ள வந்த டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி எந்திரங்களை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்,

முற்றுகையிட்ட பெண்களை ஓரமாக செல்லுங்கள் டிராக்டரில் பிரேக் இல்லை என டிராக்டர் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டிதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பெண்கள் பொதுமக்கள் மண் திருட்டை தடுத்து நிறுத்தி ஜேசிபி மற்றும் டிராக்டர்களை சிறை பிடித்து கும்பலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த மண் திருட்டில் ஈடுபட்ட கும்பல் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் டிராக்டர்களில் அள்ளிய மணலை அங்கேயே கொட்டி விட்டு தப்பியோட முயன்றது,

எனினும் அனைத்து வாகனங்களையும் மறித்து பொதுமக்கள் பெண்கள் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் கூறிதாவது:

எங்கள் பகுதிக்கு சாலை இல்லை நாங்கள் சாலைக்கு மண் அள்ளவும் விவசாயத்திற்கு மண் அள்ளவும் அனுமதி மறுக்கின்ற அரசு

எம்எல்ஏ பெயரைக் கூறிக்கொண்டு வரும் தனி நபருக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் இரவு பகலாக மண் திருட்டில் ஈடுபட்டு தணியாருக்கு விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும்,

தட்டிக்கேட்டால் MLA பிஏ பேசுவதாக மிரட்டல் விடுவதாகவும்,

தட்டிகேட்ட பெண்கள் மீது பிரேக் இல்லை டிராக்டர் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விருப்பதாகவும் பெண்கள் குற்றம் சாட்டி மணல் திருடிய டிராக்டர்களை வழிமறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்று விவசாயிகள் பெயரில் கனிமவள கொள்ளை நடப்பதாகவும் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.