நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலமாக அமைந்த நாள் குறித்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநிலம் என்று அமைந்ததை முன்னிட்டு தமிழ்நாட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதன்படி சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் தமிழ்நாடு சுரண்டப்படுவதை நிறுத்தப்பட வேண்டும்.

கல்வி முற்றுரிமையும் மாநிலத்திற்கே என்பதை அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
இந்தி சமஸ்கிருத திணிப்பு…
அரசு துறையை தனியாரிடம் கொடுப்பதையும்… தமிழே தெரியாதவர்களை பணியில் அமர்த்துவதையும்… தமிழுணர்வாளர்கள் கண்டிக்க வேண்டும்.
நீட்டை தமிழ்நாட்டில் இருந்து நீக்க வேண்டும்.
சாதி மத மறுப்பு… தமிழர்களுக்கு கல்வி வேலைகளில் 10 % விழுக்காட்டை அனைவரும் போராடிய எண்ணம் பெற வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொள்ளையடிப்பதில் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவீடு.. உத்தரப் பிரதேசத்திற்கு ஒரு அளவீடு.. குஜராத்திற்கு ஒரு அளவீடு.. கேரளாவுக்கு ஒரு அளவீடு.. என ஏற்றத்தாழ்வாகக் கொள்ளையடிப்பதாக இருக்கிறது. அதையும் கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் முழக்கமிடும்போது…
தமிழ்நாட்டில் இருந்து வரிகள் வழியாக மட்டும் கொள்ளையடிக்கப்படுகிற ஒரு ரூபாயில் 29 காசுகளையே தமிழ்நாட்டுக்குத் திருப்பித் தருகிறது இந்திய அரசு!
ஜிஎஸ்டி சுரண்டலை, சுங்கச்சாவடிகளில் வழிப்பறிப்பைத் தடுத்து நிறுத்துவோம்…! வரிகளின் முற்றுரிமையும் மாநிலங்களுக்கே! என்கின்ற கொள்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.

இதுகுறித்து விளக்கப் பொதுக்கூட்டம் தமிழக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் ஒருங்கிணைப்பில் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்விற்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் தலைவர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு மாணவர் இயக்கத் தோழர் மருத்துவர் முத்துக்குமார் வரவேற்புரை நல்கினார்.
தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் பாவெல், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் தோழர்.துரை. சித்தார்த்தன், பெரியார் பேரவை தலைவர் தோழர் நாகேசுவரன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தங்க .குமரவேல், தமிழர் உரிமை இயக்கம் தோழர் சுப்பு மகேசு, தமிழ்த் தேச குடியரசு இயக்கத் தோழர் மெய்யப்பன், தமிழக மக்கள் முன்னணியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் தோழர். மொழியமுதன், நாளை விடியும் இதழாசிரியர் தோழர் அரசெழிலன், தோழர். கோவிந்தசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் தோழர் தமிழ்ச்செல்வம்,
கணக்காயர் தோழர் மு. குமாரசாமி (எழுதமிழியக்கம்) மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் தோழர்கள், தமிழக மக்கள் முன்னணி தோழர்கள் மற்றும் அதன் உறுப்பு இயக்கத் தோழர்கள், திருச்சி மாவட்டத்தின் பிற இயக்க தோழர்கள் மேற்கண்ட முழக்கங்களை வலியுறுத்தி கருத்துரை வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கொடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதுநிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு மாணவர் இயக்கத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் துவக்கமாக தென்மொழி பன்னன் தோழர் ஈகவரசன் , தமிழிசைப்பாடகர் தோழர் நந்தன் அவர்கள் பாடல் பாடினார்கள். திருக்குறள் பேரவை பொறுப்பாளர் தோழர் தமிழிசைப்பா நிகழ்வினை நெறியாளுகை செய்தார். இறுதியாக தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொதுச்செயலாளர் வை.தேனரசன் நன்றி உரையாற்றினார்கள். இனிதே தமிழ் நாடு நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.