• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jun 15, 2022

ஓட்ஸ் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப், வெங்காயம் - 1, ப.மிளகாய் - 1, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் கடாயில் ஓட்ஸை போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு சிறிது வதக்கி உப்பு, பொடித்த ஓட்ஸை போட்டு சிறிது கிளறவும் (சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்).   2 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அந்த மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும் 10 முதல் 15 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.  இந்த ஓட்ஸ் கொழுக்கட்டை மிகவும் சத்தானது. டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் கஞ்சி, உப்புமா மட்டும் செய்யாமல் இப்படியும் ஓட்ஸை செய்து சாப்பிடலாம்.