விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. தீயணைப்பு நிலையத்திற்கு ஏற்கனவே ஐந்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய தீயணைப்பு வாகனம் உள்ளது.

தற்போது கூடுதலாக இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய நீர் தாங்கி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் சிறிய தீ விபத்துகள், வீடுகளில் பாம்பு புகுந்து இருந்தால் அதனை பிடிக்கவும், விபத்து நடந்த இடத்திற்கு குறுகலான சாலையில் செல்வதற்கு வசதியாக இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தண்ணீரில் மூழ்கிய நபர்களை மீட்பதற்காக தண்ணீரில் மேற்பரப்பில் மிதக்கும் தன்மை கொண்ட கவச உடைகள், மீட்பு கயிறு, மீட்பு உபகரணங்கள், தீப்பிடித்த கட்டிடத்திற்குள் செல்வதற்கு வசதியான இரும்பு உபகரணங்கள், உள்பட நவீன பாதுகாப்பு கருவிகள் இணைக்கபட்டுள்ளன.

தற்போது வந்துள்ள சிறிய தீயணைப்பு வாகனம் கூடுதல் வேகத்துடன் செல்லக்கூடியது என்பது குறிப்பிடதக்கது. தீயணைப்பு நிலையத்திற்கு தற்போது இரண்டு வாகனம் இருப்பதால் மக்களுடைய பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் அழகுச்சாமி கூறினார்.




