தேவையான பொருட்கள்:
மைதா மாவு: ஒரு கப், அரிசி மாவு: கால் கப், புளித்த தயிர்:அரை கப், ப. மிளகாய் : 3 ( பொடியாக அரிந்தது), வெங்காயம்: 1 ( பொடியாக அரிந்தது), வேர்க்கடலை பருப்பு : சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு, உப்பு: தேவையான அளவு, சமையல் எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதாமாவையும் அரிசிமாவையும் தயிரில் சிறிது நீர் விட்டு வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். பிறகு அதில் மற்ற எல்லா பொருட்களுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஸ்டவ்வில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி அதில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சிறிது ஆறியதும் சாப்பிட்டால் அருமையான ருசியுடன் இருக்கும். மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்றது. மழை வரும் போதும் செய்து சாப்பிடலாம்.